ரஷியாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி பலி

0
153

ரஷிய நாட்டின் தாகெஸ்தான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்த கொடிய சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உடல் சிதறி உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றது.

ஆனால் இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட அந்த அமைப்பின் ஆதரவு பெற்ற ‘அமக்’ செய்தி நிறுவனம், இந்த தாக்குதலில் 10 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கூறி உள்ளது.

ஆனால் பலி எண்ணிக்கையை தனிப்பட்ட முறையில் சோதித்து அறிய முடியவில்லை என ‘ரெயிட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY