பொத்துவில் ஊரணி பிரதேசத்தில் இ.போ. சபை டிப்போ ஒன்றினை ஏற்படுத்த அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

0
174

அம்பாறை பொத்துவில் மக்களது போக்குவரத்து வசதியினை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஒன்றினை பொத்துவில் ஊரணி பிரதேசத்தில் ஏற்படுத்துவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடம் வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவுக்கு அனுப்பி வைத்துள்ள வேண்டுகோள் கடிதத்தில் மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

பொத்துவில் பிரதேசம் இன்று சுற்றுலாத்துறையில் பிரபலமான பிரதேசமாக மாறிவருகின்றது. இப்பிரதேசத்தின் இயற்கையினை அனுபவிப்பதற்கு நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பெரம் எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர்.

இவ்வாறானதொரு பிரதேசத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட பஸ் டிப்பொ அமைகின்ற போது பயணிகளின் நேரத்தை பெருமதி மிக்கதாக மாறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதே வேளை தற்போது பஸ்களுக்கு எரிபொருள் அக்கறைப்பற்று பஸ் டிப்போவில் இருந்தே வழங்கப்பட்டுகின்றது என்பதையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் உள்ளிட்ட பிரதேச மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் கவனத்திற்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY