கனடா விமான விபத்தில் 7 பேர் பலி

0
170

கனடாவில் உள்ள கியூபெக் தீவில் இடம்பெற்ற தனியார் விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

கனடாவில் கிழக்கு கியூபெக் நகருக்கு சென்ற இந்த தனியார் விமானம் வானிலை மோசமான காரணத்தால் மகட்லாண்ட் தீவில் தரையிறங்கிய போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் பயணித்த கனடா முன்னாள் மந்திரி ஜீன் லாப்பியரி உட்பட 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விமான விபத்து குறித்து ஆய்வு செய்ய கனடா விமான போக்குவரத்து துறை மகட்லாண்ட் தீவிற்கு விரைந்துள்ளது.

LEAVE A REPLY