உலகக் கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்: நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட அப்ரிடி

0
197

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டு மக்களிடம் கேப்டன் அப்ரிடி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தற்போது துபாயில் இருக்கும் அவர் இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், நான் உங்களுக்கு (மக்கள்) பதில் அளிக்க இங்கு வந்து உள்ளேன். என் மீதும் என்னுடைய அணியின் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையின்படி என்னால் வாழமுடியவில்லை என்பதற்காக உங்களிடம் இன்று மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.

நான் எப்போது சீருடை அணிகின்றேனோ, மைதானத்திற்குள் நடக்கின்றேனோ அப்போது எல்லாம் என்னுடைய நாட்டு மக்களின் உணர்ச்சிகளையும் என்னுடன் எடுத்துச் செல்கின்றேன். இது 11 வீரர்களின் அணி கிடையாது, ஒவ்வொரு பாகிஸ்தானியரையும் கொண்டுள்ளது.

இவ்வாறு அப்ரிடி கூறியுள்ளார்.

உலகக் கிண்ணத்தில் இந்திய அணியிடம் தோல்வி, இந்தியாவை புகழ்ந்து பேசியது உள்ளிட்ட சர்ச்சைகளால் அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தையே அப்ரிடியின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்ரிடி ஓய்வு குறித்த தனது அறிவிப்பை சில தினங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார். துபாயில் இருந்து அவர் நாடு திரும்பியதும் அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY