டி20 உலகக் கிண்ணத்தில் தொடரில் இருந்து யுவராஜ் சிங் விலகல்

0
306

காயம் குணமடையாததால், டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து யுவராஜ் சிங் விலகி உள்ளார்.

மும்பையில் நாளை நடைபெறும் டி20 உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் மோதுகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் ரன் எடுப்பதற்கு ஓட முடியாமல் தடுமாறினார். தசைபிடிப்பில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், யுவராஜ் சிங்க்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், காயம் குணமடையாததால் டி20 உலகக் கோப்பையில் தொடரில் இருந்து யுவராஜ் சிங் விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள டி20 உலகக் கிண்ணத்தில் யுவராஜ் சிங் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றாலும், நடுவரிசையில் களமிறங்கும் அவரது அனுபவம் இந்திய அணிக்கு பெரும் பலமாகும். மேலும் பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும்பட்சத்தில் யுவராஜ் சிங்கை தோனி பயன்படுத்துவார். ஆனால் யுவராஜ் சிங் உலகக் கிண்ணத்தில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

யுவராஜ் விளையாடாதபட்சத்தில் அவருக்கு பதிலாக ரகானே அல்லது மணிஷ் பாண்டே களமிறங்க வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY