திருகோணமலை மாவட்டம் ஐ.தே.க.விடமிருந்து அழிந்துபோய்விடும் அபாயம்தான் காணப்படுகின்றது

0
194

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக எப்போதும் விளங்குவது திருகோணமலை மாவட்டமே. குறிப்பாக அங்கு முஸ்லிம் ஆதரவாளர்களினாலேயே ஐக்கிய தேசியக்கட்சி தனது ஆசனத்தை தக்கவைத்து வந்துள்ளது.

1947 ஆம் ஆண்டு ஐ.தே.க. சார்பில் ஏ.ஆர்.எம்.ஏ.அபூபக்கர் மூதூர் தொகுதியில் வெற்றிபெற்றார். 1952, 1956 எம்.எச்.ஈ முஹம்மத் அலி வெற்றிபெற்றார். 1960 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் அதே வருடத்தில் ஜூலையில் இம்பெற்ற தேர்தல்களில் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. எனினும் 65 ஆம் ஆண்டு மீண்முபு எம்.எச்.ஈ. முஹம்மத் அலி தெரிவானார்.

70 ஆம் ஆண்டு மீண்டும் இழக்கப்பட்ட போதிலும் 1977 ஆம் ஆண்டு எம்.எச்.ஈ. மஹ்ரூப் ஐ.தே.க. மூலம் பாராளுமன்றுக்கு சென்றார். அதனை தொடர்ந்து 1989, 1994 ஆண்டு வரை இடம்பெற்ற தேர்தலிலும் அசைக்க முடியாத ஓர் அரசியல் வாதியாக திகழ்ந்த இவர் அரசியல் கொலை செய்யப்பட்டார்.

அது வரை திருகோணமலை ஐ.தே. க வின் அசைக்க முடியாத கோட்டையாக காணப்பட்டது. இவரின் தோல்வியையடுத்து அங்கு அப்துல்லா மஹ்ரூப் ஐ.தே.க. வின் அமைப்பாளரானார். இவரின் சிறுபிள்ளைதன அரசியலால் திருகோணமலை கோட்டை ஆட்டங்காண ஆரம்பித்தது.

2000, 2001 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற போதிலும் அவரின் கையாகாளாத் தனத்தினாலும் மு.கா.வுடனான கூட்டணியினாலும் ஐ.தே.க. 2004, 2010 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சிய திருகோணமலையில் பிரதிநிதித்துவத்தை இழந்தது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் திருகோணமலைக்கு ஓர் இளைய தலைமை ஐ.தே.க. மூலம் கிடைக்கப்பெற்றது. இவரின் வருகை அப்துல்லா மஹ்ரூபுக்கு பிடிக்கவில்லை. தொடர்ச்சியாக இவரை தேற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிகொண்டு அழைந்தார்.

2010 ஆம் ஆண்டு பொதுத் தோர்தலில் களமிறங்கிய இளம் தலைமையான இம்ரான் மஹ்ரூப் வெறுமனே நூற்றுக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும் 2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ந ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியாக இருந்தார். 2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் அப்துல்லா மஹ்ரூப் போட்டியிட்ட போதிலும் இம்ரான் மஹ்ரூபிடம் தோற்றுப்போனார்.

ஆனாலும் தொடர்ந்தும் மூதூர் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக அப்துல்லா மஹ்ரூப் செயற்பட்டார். இந்நிலையில் இம்ரான் மஹ்ரூப் திருகோண மலை தொகுதி ஐ.தே.க. அமைப்பாளராக செயற்பட்டார். கிராம புரங்களில் இவர் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செய்தார்.

2015 ஆம் ஆண்டு ஜூலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது மற்றுமொரு போராட்டம் வெடித்தது. ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸும் (மு.கா.வுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்து செயற்பட்டது) அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டணி அமைத்தது.

அத்துடன் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமையான எம்.கே.டி.எஸ் குணவர்தணவும் ஜாதிக ஹெல உறுமயவும் ஐ.தே.க கூட்டணியில் இணைந்தார். இதனடிப்படையில் வேட்பாளர் பட்டியலில் பெரும் போட்டி நிலவியது.

வெறுமனே மூன்று தொகுதிகளுக்காக ஒரு போணஸ் ஆசனம் அங்களாக 4 வேட்பாளர்களை தெரிவு செய்ய 7 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும். இதில் ஐ.தே.க சார்பில் சிங்கள வேட்பாளர்களுக்கும் இடமளிக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த வகையில் ஐ.தே.க. இம்ரானுகே முதலிடம் வழங்கியது.

அடுத்தபடியாக டாக்டர் அருணவும் பல்லேகல கருணாரத்ணவும் மு.கா. சார்பில் எம்.எஸ்.தௌபீக்கும் டாக்டர் ஸாஹிரும் ஜாதிக ஹெல உறுமய சார்பில் சுனில் சாந்தவும் வேட்பாளரும் களமிறக்கப்பட்டனர்.

அந்த மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸபு சார்பில் ஹில்மி மஹ்ரூப் நிறுத்தப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும் இறுதி தருணத்தில் அப்துல்லா மஹ்ரூபிற்கு வாய்ப்பளிக்கப்படாமையினால் அவர் ஹில்மியின் வாய்ப்பை தட்டிப்பறித்துக்கொண்டார்.

ஆனபோதிலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே என வலியுறுத்தினார். அத்துடன் அவர் கட்சி மாறியதாக ஊடகங்களில் செய்தி வெ ளியிடப்பட்டபோதிலும் மறுநாள் அதே ஊடகத்தில் தான் ஐ.தே.க. கட்சியிலேயே இருப்பதாகவும் ரிஷாத் மற்றும் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் விட்டுக்கொடுத்தனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் முடியும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் என்றே குறிப்பிட்டு வந்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸபு அப்துல்லாஹ் மஹ்ரூப் தமது கட்சியின் பிரதிநிதி என தெரிவித்தது. இந்நிலையிலும் தொடர்ந்தும் மூதூர் தொகுதியின் அமைப்பாளராக அப்துல்லா மஹ்ரூபே இருந்தார். இன்றும் அவர்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் மூதூர் தொகுதியின் அமைப்பாளராக இருக்கின்றார்.

ஆனாலும் அவர் தமது கட்சியின் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளை விலை பேசி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந் பிரித்தெடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினர்கள் 06 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27, 2016)மாலை இணைந்துள்ளனர்.

கிண்ணியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான கே.முனவ்வர்கான் (ஐக்கிய தேசிய கட்சி), எம்.ஜி.எம்.பைரூஸ் (ஐக்கிய தேசிய கட்சி), குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆதம்வாவா தௌபீக் (ஐக்கிய தேசிய கட்சி), குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெ.ஜெனா (ஐக்கிய தேசிய கட்சி), தம்பலாகமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முகம்மது தாலிபாலி (ஐக்கிய தேசிய கட்சி), தம்பலாகமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கலீமுள்ளா (ஐக்கிய தேசிய கட்சி) ஆகியோரே இவ்வாறு இணைந்துகொண்டவர்களாவர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்; அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

அப்துல்லாஹ் மஹ்ரூப் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்துகொண்டு இங்குள்ளவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் கரை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இம்ரான் மஹ்ரூபிற்கு பெரும் தலையிடி ஏற்பட்டுள்ளது. கடந்த 6 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோண மலை மாவட்ட தனி பிரதிநிதியாக இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம் ஐ.தே.க.விடமிருந்து அழிந்துபோய்விடும் அபாயம்தான் காணப்படுகின்றது.

(அஹமட் இர்ஷாட் ஊடாக கண்டி சுஹைல்)

LEAVE A REPLY