பொத்துவிலுக்கான தனியான வலயக் கல்விப் பணிமனையொன்றினை அமைக்கக் கோறி அமைச்சர் றிசாத் ஜனாதிபதிக்கு கடிதம்

0
151

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கான தனியான வலயக் கல்விப் பணிமனையொன்றினை அமைத்து இப்பிரதேச மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு கோறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மத் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டியுள்ளார்.

பொத்துவில் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில்லுக்கான பிரதான அமைப்பாளரும், முன்னாள் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகருமான அப்துல் மஜீத் இது தொடர்பில் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இந்த கடிதத்தினை அமைச்சர் எழுதியுள்ளார்.

பொத்துவில் தொகுதியின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் அடிப்படை தேவைகள் இனம் காணப்பட்டு அவைகள் உரிய அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இப்பிரைதேசத்தில் வாழும் ஆசிரியர்களினதும், மாணவர்களினதும், முக்கிய தேவைப்பாடான வலயக் கல்விப் பணிமனையின் அவசியம் குறித்தும் அந்த கடிதத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

பொத்துவில்லில் வலயக் கல்விக் கல்வி பணிமனை அமையும் பட்சத்தில் லாகுகல.பானம மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகளை நெறிப்படுத்த முடியும் என்றும் இதன் மூலம் இப் பிரதேசத்தின் கல்வி வளர்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளை, இதற்கு முன்னர் கல்வி அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன பொத்துவில்லுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது பொத்துவில் வயலக் கல்விப் பணிமனையினை ஏற்படுத்த தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கிய போதும் அவை இடம் பெறவில்லை.

இது தொடர்பிலான ஆவணங்கள் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மூலம் கல்வி அமைச்சுசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY