கழுகை துன்புறுத்தி கொன்ற மேலும் அறுவர் சிக்கினர்

0
214

கழுகு ஒன்றை துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் காலி பொலிஸில் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் வந்சாவல மற்றும் கந்துருதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்னதாக, இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே குறித்த சந்தேகநபர்கள் பற்றிய தகவல் வௌியானது என்பது குறிப்பிடத்தக்கது.

(அத தெரண)

LEAVE A REPLY