ஐ.எஸ். ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்க

0
296

சிங்கள ராவய ஜனாதிபதியிடம் கோரிக்கை ஐ.எஸ்.தீவி­ர­வாத இயக்­கத்தை இலங்­கையில் தடை­செய்து இங்­கி­ருக்கும் ஐ.எஸ் ஆத­ர­வா­ளர்­களைக் கைது செய்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் இலங்­கை­யி­லி­ருந்து மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வேலை­வாய்ப்பு பெற்றுச் செல்லும் முஸ்­லிம்கள் தொடர்பில் அந்­தந்த நாடு­க­ளி­ட­மி­ருந்து அறிக்­கை­களைப் பெற்று தூத­ர­கங்கள் மூலம் அவர்­களைக் கண்­கா­ணிக்கும் படியும் சிங்­கள ராவய அமைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கோரி­யுள்­ளது.

ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தின் பிரதி உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கி­றது.

சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் இவ்­வேண்­டு­கோளை ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்­துள்ளார்.

தற்­போது ஐ.எஸ். தீவி­ர­வா­தத்­தி­லி­ருந்தும் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

ஆனால் இலங்­கை­யி­லி­ருந்து மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வேலை­வாய்ப்பு பெற்றுச் செல்லும் முஸ்­லிம்கள் அங்கு தொழில் வழங்­கு­நர்­க­ளிடம் தொழில் செய்­கின்­றார்­களா? இன்றேல் அங்­கி­ருந்தும் இடம்­மாறிப் போயுள்­ளார்­களா?என்­பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஏனென்றால் இவ்­வாறு மத்­தி­ய­கி­ழக்கு நாடு­க­ளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்­ப­வர்கள் அங்­கி­ருந்து சிரி­யா­வுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்­கி­றார்கள். எனவே அர­சாங்கம் தூது­வ­ரா­ல­யங்கள் மூலம் அவர்­களை கண்­கா­ணிக்க வேண்டும்’ என்று கோரி­யுள்ளார்.

அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் இது­தொ­டர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், ‘ உளவுப் பிரி­வினர் இலங்­கையின் ஆறு பிர­தே­சங்­களில் ஐ. எஸ். ஆத­ர­வா­ளர்கள் இருப்­ப­தா­கவும் மொத்தம் 45 பேர் கணக்­கி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். சிங்­கள ராவய அமைப்பு இரு வரு­டங்­க­ளுக்கு முன்பே இலங்­கையில் ஐ.எஸ். தீவி­ர­வாதம் நிலை­கொண்­டுள்­ள­தாக அர­சாங்­கத்தை எச்­ச­ரித்­தி­ருந்­தது. தர்கா நகர் கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் ஐ.எஸ். ஆத­ர­வா­ளர்­களே செயற்­பட்­டார்கள். அவர்கள் பள்­ளி­வா­ச­லுக்குள் ஆயுதம் தரித்­தி­ருந்­தார்கள்.

இந்த விப­ரங்­களை நாம் வெளி­யிட்டோம் அர­சாங்­கமும் உளவுப் பிரி­வி­னரும் இதைத் தேடிப் பார்க்க வேண்­டு­மெ­னவும் கோரினோம்.

வில்­பத்து பிர­தே­சத்தில் வெளி­நாட்­டவர் புதிய மொழி பேசு­ப­வர்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள் என்­ப­தையும் வெளிச்­சத்­துக்கு கொண்டு வந்தோம். ஐ.எஸ். தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக செயற்­படும் அமெ­ரிக்க, ரஷ்ய நாடு­களின் இலங்­கை­யி­லுள்ள தூது­வர்­களை சந்­தித்து நாம் அவர்­களைப் பாராட்­டி­ய­துடன் நன்­றி­க­ளையும் தெரி­வித்தோம்.

மாலை­தீ­வி­லி­ருந்தும் மலே­சி­யா­வி­லி­ருந்தும் வியா­பார நோக்கில் வரு­வ­தாகக் கூறி ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இலங்­கைக்குள் பிர­வே­சிக்­கி­றார்கள். கொழும்­பி­லி­ருந்து சிரி­யா­வுக்கு செல்லும் முயற்­சி­களில் ஈடு­ப­டு­கி­றார்கள். புடைவை வியா­பாரம் என்ற பின்­ன­ணியில் வருகை தரும் இவர்கள் இங்கு காணிகள் வாங்கி வாழ்ந்தும் வருகிறார்கள்.

எமது உளவுப் பிரிவினர் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு முஸ்லிம்கள் தொடர்பிலும் அவர்களுடன் உறவுவைத்துள்ள முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தி அவர்களது நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.

ஐ.எஸ். அமைப்பை தடைசெய்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY