எல்லாவற்றுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்: விமான கடத்தல் பற்றி சைபிரஸ் அதிபரின் ஜோக்

0
153

எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை 50 வயது மதிக்க தக்க ஆண் ஒருவன் கடத்தினான்.

அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில் உள்ள லர்னாகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை கடத்தியவன் தனது இடுப்பில் வெடிகுண்டுடன் கூடிய பெல்ட்டை கட்டியிருந்தான். இதனால் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிகையில் இறங்கவில்லை.

கடத்தல்காரன் தனக்கு சைப்ரஸ் தீவில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், விமானத்தை தகர்த்து விடுவேன் என சைப்ரஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்தான். சைப்ரஸ் நாட்டு பெண்ணான தனது முன்னாள் மனைவியை சந்தித்துப் பேச வேண்டும் எனவும் அந்த கடத்தல்காரன் கோரிக்கை விடுத்தான்.

இதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு விமானத்தை கடத்தியவன் சைப்ரஸ் போலீசாரிடம் சரண் அடைந்தான். இதனை அடுத்து பல மணிநேரமாக நடந்து வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது. அவன் அணிந்திருந்தது போலி வெடிகுண்டு பெல்ட் என தெரியவந்தது.

முன்னதாக, கடத்தல் பற்றி சைபிரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியடெஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது “ கடத்தல்காரன் அணிந்திருப்பது உண்மையான வெடிக்குண்டு பேல்டா என்பது சந்தேகமாக உள்ளது. ஆனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி அவனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.” என்று கூறினார்.

அப்போது ஒரு செய்தியாளர் இந்த கடத்தலுக்கு காதல் காரணமா? என்று கேட்டார் அதற்கு நிகோஸ் அனஸ்டாசியடெஸ் “ எல்லாவற்றுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்” என்று சிரித்தப்படி கூறினார். செய்தியாளர்களும் சிரித்தனர்.

ஆனால் பெண்கள் குறித்து சைபிரஸ் அதிபரின் ஜோக் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY