என்னை ஆச்சரியப்பட வைத்த சம்பவம்: உண்மை சம்பவம்

0
471

சில நிமிடங்கள் ஒதுக்கி வாசியுங்கள். உங்கள் ஈமான் அதிகரிக்கலாம்.

சன நெருக்கம் மிகுந்த பஸ். புட் போர்ட்டில் நின்ற அந்த ஹாஜியாருக்கு உள்ளே நின்று கொண்டிருந்த பயணி ஒருவரின் பொக்கட்டில் ஒரு பிக் பொக்கட் கையை விடுவது தெரிந்தது.

சைக்கினையால் அந்தப் பயணியை எச்சரித்தார் ஹாஜியார்.

ஒருவாறு உள்ளே சென்று ஹாஜியார் கிடைத்த சீற்றில் உட்கார்ந்த சிறிது நேரத்தில் அந்தப் பிக் பொக்கட் திடீரென்று இறங்கி ஓடினான்

ஹாஜியார் அமைதியாக இருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன.

ஹாஜியாரின் பக்கத்து சீற்றும் காலியாக அந்தப் பெரும்பான்மை இனப் பயணி உட்கார முயற்சித்த போதுதான் அவருடைய போன் திருடப் பட்டதை உணர்ந்து பலமாக சத்தமிட்டார்.

‘நான் உங்களை எச்சரிக்கை செய்தேனே”. சிங்களத்தில் ஹாஜியார் கேட்டார்.

“பணம் இருந்த பையை பாதுகாத்ததில் போனை கவனிக்க மறந்திட்டன்” பதட்டத்துடன் பதில் வந்தது.

ஹாஜியாரின் கைபேசியை வாங்கி களவு போன போனுக்கு கோல் எடுத்தார். றிங் போனது. பதிலில்லை.

ஹாஜியார் அவரை ஆறுதல் படுத்தினார். “நான் ஒரு வசனத்தைக் கூறுகிறேன்.அதை நம்பிக்கையோடு சொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ் போன் கிடைக்கலாம்” ஹாஜியார் மெதுவாகக் கூறினார்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் கூறுங்கள் என்றார் பயணி

انا لله وانا اليه راجعون؛ اللهم اجرني في مصيبتي واخلفلي خيرا منها

“Inna lillahi wa Inna Ilaihi Raji’un. Allahumma ajurni fi musibati wakhluf li khayran minha

அந்த சிங்கள சகோதரர் கஷ்டப்பட்டு சொல்லி முடித்தார்.

ஹாஜியார் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக் கொண்டார்.

அன்று மாலை நேரம். ஹாஜியாருடைய கை பேசிக்கு ஒரு அழைப்பு. “ஹாஜியார் எனக்கு போன் கிடைத்து விட்டது.”

“அல்ஹம்துலில்லாஹ். எப்படி”

“ஆச்சரியம் ஹாஜியார். நான் மனைவிக்கு கோல் பண்ணி போன் காணாமல் போனதை சொல்லி விட்டு எனது வேலையை கவனிக்கச் சென்று விட்டேன். பின்னேரம் வீடு திரும்பியதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. காணாமல் போன போண் மனைவியின் கையில் இருந்தது. எப்படி உன்னிடம் வந்தது என்று கேட்டேன். ‘நீங்க கோல் பண்ணி கொஞ்ச நேரத்தில ஒருத்தன் கதவைத் தட்டினான். நோனா புது போன் ஒன்று நல்ல மலிவா இருக்கு தரவா என்றான். எனக்குள் மூளைக்குள் எங்கோ இடித்தது. வாங்கிப் பார்த்தேன். உங்களுடைய போன்தான். கள்ளன் கள்ளன் என்று கத்தத் தொடங்க போனை விட்டு விட்டு ஓடி விட்டான்’ என்று மனைவி சொன்னா ஹாஜியார்.”அந்த சிங்கள சகோதரர் போனில் கூறி முடித்தார்.

கதை கப்ஸா என்று கொமண்ட்ஸ் எழுதத் தயாராகும் சகோதரர்களுக்கு-

குறித்த சம்பவத்தில் வரும் ஹாஜியார் பள்ளி மிம்பருக்கு அருகில் நின்று மேற்படி சம்பவத்தைக் கூறியதை நான் நேரடியாகக் கேட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முழு நிகழ்ச்சியிலுமே என்னை ஆச்சர்யப் பட வைத்தது இதுதான். ஆயிரக் கணக்கான வீடுகள் இருக்கையில் சரியாக எப்படி குறித்த திருடன் அதே வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான்.

சிலருக்கு இது கப்ஸாவாக அல்லது சாதாரண சம்பவமாகத் தெரியலாம்.ஆனால் என்னைப் பொறுத்த வரை இதுவும் ஒரு இறை அற்புதமே.

-நிஷவ்ஸ்-

LEAVE A REPLY