பள்ளிவாயல்களில் கடமையாற்றும் வசதி குறைந்த இமாம்கள் முஅத்ததீன்களில் 500 பேரை இலவசமாக உம்றாவுக்கு அனுப்புவதற்கான விசேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்திருக்கும் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

இந்தத் திட்டத்தின் முதற் கட்டமாக 100 (இமாம்கள்,முஅத்தின்கள்) பேரை புனித உம்றாவுக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இது போன்று மக்களுக்கும் சமூகத்திற்கும் பிரயோசனமான அவரது வேலைத்திட்டங்களை மனப்பூர்வமாகப் பாராட்டுவதோடு அவரது நல்ல எண்ணங்களுக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாகக் கொடுக்க வேண்டும் எனவும் பிரார்திக்கின்றேன்.

LEAVE A REPLY