காயம் அடைந்த பிளட்சருக்கு பதிலாக லென்டில் சிமன்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைவு

0
148

காயமடைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் பிளட்சருக்கு பதிலாக லென்டில் சிமன்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்துக்கொண்டிருந்த பிளட்சருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ரிட்டயர் ஹர்ட் முறையில் பாதியில் வெளியேறினார். ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கிய பிளட்சரால் ரன் குவிக்க முடியவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது வெஸ்ட் இண்டீஸ்.

இந்நிலையில் வரும் வியாழன் அன்று டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது வெஸ்ட் இண்டீஸ். இந்த போட்டியில் பிளட்சருக்கு பதிலாக லென்டில் சிமன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிமன்ஸ் இன்று இந்தியா வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY