(Photos) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும்

0
100

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று (29) நடைபெற்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதி அருகில் இருந்து கண்டன பேரணி காந்தி பூங்காவரை சென்றடைந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எக்டா ஒப்பந்தத்தினை நிறுத்துமாறு கோரியும், மாலபே தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு பொறுப்பேற்குமாறு வலிறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்காவினை பேரணி வந்தடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் அழகையா லதாகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், பல்வைத்தியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் எக்டா உடன்படிக்கையினை நிறுத்துமாறு கோரும் பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் ஏந்தியிருந்தனர்.

IMG_0003 IMG_0008 IMG_0014 IMG_0016 IMG_0032 IMG_0035 IMG_0056 IMG_0062 IMG_0077 IMG_0086

LEAVE A REPLY