கல்முனை நிதி நிறுவன பெண் முகாமையாளர் கொலை; சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

0
225

கல்முனை சர்வோதய நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் திலீபன் சுலக் ஷனா (33)கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமாருக்கு நேற்று மீண்டும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பயாஸ் றசாக் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று 28ஆம் திகதி திங்கட்கிழமை மட்டு.சிறைச்சாலையிலிருந்து சந்தேக நபர் உதயகுமார் பாதுகாப்பாக மன்றுக்கு அழைத்து வரப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பயாஸ் றசாக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சந்தேகநபர் சார்பில் இரு சட்டத்தரணிகள் ஆகியோர் ஆஜராகினர்.
இதேவேளை கல்முனைப் பொலிஸார் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டபிள்யூ.அப்துல் கபார் தெரிவித்தார்.

நற்பிட்டிமுனை கல்முனையைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியின் தாயான 33 வயதுடைய ராஜேந்திரன் சுலக்ஷனா திலீபன் என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி அந்த அலுவலகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY