(Breaking News) எகிப்து விமானம் ஒன்று கடத்தப்பட்டுள்ளது

0
156

எகிப்தின் உள்ளூர் சேவை விமானம் ஒன்று இன்று (29) கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுமார் 81 பயணிகளுடன் எகிப்தின் அலக்ஸாந்திரியா நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு சென்ற விமானம் ஒன்றே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

MS181 எனப்படும், குறித்த விமானம் தற்போது சைப்ரஸ் நாட்டின் லானகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக, அவ்விமானநிலையம் அறிவித்துள்ளது.

குறித்த விமானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கடத்தல்காரர்கள் அவ்விமானத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளையில், கடத்தல்காரர்கள் இதுவரை எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY