தலைவலியை போக்கும் எளிய வைத்தியம்

0
273

சின்ன உடல்நலக் குறைவு என்றால் கூட மருத்துவரை நாடி ஓடாமல் வீட்டில் கிடைக்கும்பொருட்களை கொண்டு தடுக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

* எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்.

* குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும், கால்களையும் சுடுநீரில் விடவும். இந்த முறை, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.

* அரைத் தேக்கரண்டி கடுகுப் பொடியை, மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்தக் கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

* பத்து அல்லது பதினைந்து பாதாம்பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.

* மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்) மட்டும் பருகலாம். நீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

* தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் தலையில் ஒத்தடம் தரலாம்.

LEAVE A REPLY