(Poem) பசங்க

0
136

பிழையாய் நடக்கிறார் பசங்க
பெற்றோர் தடுக்கல்ல – பாசங்க
முளையில கிள்ளாட்டி விசங்க
மூத்துத் திருந்தல் என்பது வேசங்க

பிரியம் என்பது நிசங்க
பிள்ளையை நன்றாய் நேசிங்க
உரிய முறை வளர்க்காட்டி நாசங்க
உலகம் மிதித்து விடும் நசுங்க.

கணக்கின்றிக் கொடுக்கும் காசுங்க
கண்ணீரைத் தரும் வாழ்வு கசங்க
மனம் விட்டு பிள்ளையுடன் பேசுங்க
மனக் காயம் ஆற மருந்து பூசுங்க

கண்டிக்கவே கூடா எனும் கோசங்கள்
கலாச்சாரம் சீரழிக்கும் மோசங்கள்
கண்டபடி பிள்ளை வளரும் தேசங்கள்
கண்டிருப்பீங்க அங்கே உள்ள நாசங்கள்

பிள்ளைக்காய் இறையிடம் யாசிங்க
பிற்காலம் பற்றி நன்றாய் யோசிங்க
இல்லத்தில் இறைமறையை வாசிங்க
இன்பமாய்ப் பிள்ளையுடன் வசிங்க

LEAVE A REPLY