மட்டன் சுக்கா [எளிய முறை]

0
210

தேவை:
மட்டன் – அரை கிலோ.
மிளகு, சீரகம் – 2 ஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – 10.
கரம்மசாலா – 1 ஸ்பூன்.
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

தேவையான பொருட்களில் இருக்கும் எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.

அரைத்த விழுதில் மட்டன் துண்டுகளுடன், உப்பையும் கலந்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்மில்’ வைத்து ‘ மட்டன்’ ‘சுக்கா’ வாக ஆகும் வரை மட்டன் துண்டுகளை திருப்பி திருப்பிப் போடவும்.

LEAVE A REPLY