சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கண்டறிய மோப்ப நாய்கள் பிரிவு

0
144

சிறைச்சாலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தும் வேலைத் திட்டத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் நேற்று(28) வெலிக்கடை சிறைச்சாலையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்த வேலைத் திட்டத்திற்கு தேவையான மோப்ப நாய்களை சிறைச்சாலைகள் அமைச்சுக்கு பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் இவ் வேலைத் திட்டத்தின் முன்னோடியாக மோப்ப நாய்கள் சிறைச்சாலைகள் எங்கும் அழைத்துச் செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் மோப்ப நாய்களை பயன்படுத்தும் வேலைத் திட்டம் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்படுமென்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தும் வேலைத் திட்டத்தினை ஆர்மபிப்பது அமைச்சரின் எண்ணக்கருக்களில் ஒன்றாகும்.

LEAVE A REPLY