இம்முறை இடம்பெற்றுவரும் டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி புதிய சாதனை

0
970

இம்முறை இடம்பெற்றுவரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த முதல் அணியாக இலங்கை பதிவானது.

இன்றைய தினம் இடம்பெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி 120 ஓட்டங்களையே பெற்றது.

இம்முறை இடம்பெற்ற தகுதிகாண் சுற்றுப்போட்டிகளின் போதும் முதலில் துடுப்பெடுத்தாடிய எந்தவொரு அணியும் 20 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY