விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தோம்: ஸ்டீவன் சுமித்

0
156

6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த போட்டி தொடரில் மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த வாழ்வா-சாவா? லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன், அரை இறுதிக்கும் முன்னேறியது.

இந்திய அணியின் வெற்றிக்கு துணைகேப்டன் விராட் கோலி முதுகெலும்பாக விளங்கினார். அவர் 51 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து அணியை தனிநபராக வெற்றி பெற வைத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் கருத்து தெரிவிக்கையில், ‘160 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் தான். ஒரு கட்டத்தில் நாங்கள் வலுவான நிலையில் இருந்ததாக நான் நினைக்கிறேன். அந்த கட்டத்தில் இந்திய அணி ஒரு பந்துக்கு 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. பேட்டிங்குக்கு சாதகம் இல்லாத பிட்ச்சில், நெருக்கடிக்கு மத்தியிலும் விராட் கோலி நம்ப முடியாத வகையில் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். விராட் கோலி மிகவும் திறமை வாய்ந்த வீரர். சேசிங் செய்கையில் அவரது ஆட்ட நேர்த்தி மிகவும் அருமையானதாக இருந்தது’ என்றார்.

LEAVE A REPLY