போதியளவு மழை வீழ்ச்சியினால் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும்: CEB

0
127

நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசங்களுக்கு போதியளவு மழை கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியுமென மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால கூறினார்.

நேற்று (28) இரவு கிடைத்த மழை வீழ்ச்சியையும் தற்போது இருக்கின்ற வளத்தையும் பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அனுர விஜேபால குறிப்பிட்டார்.

இதன் மூலம் மின் வெட்டை அமுல்ப்படுத்தாமல் சகல பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மின்சார சபை தீர்மானித்தள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மின்வெட்டுக்களால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தத்தை தெரிவிப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

(NF)

LEAVE A REPLY