நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லை; வறட்சியும் காரணமல்ல

0
138

“மாபோல பகுதியில் ஜாகிங் செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்டமை தமது அமைச்சினால் அல்ல” என, மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அப் பகுதியை நீக்கியவர்கள் அதனை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பாதை தமது அமைச்சினால் நிர்வகித்த அல்லது நிர்மாணிக்கப்பட்டது இல்லை என இதன்போது சுட்டிக்காட்டிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கடந்த காலப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அதனை தாம் புனரமைப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நிலவும் வறட்சியினாலேயே மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி நிலவுகிறது. நாட்டில் 4000 மெகாவோட் மின்சாரக் கொள்ளவு உள்ளது. எனினும் 2300 மெகாவோட் மின்சாரத்துக்கான கேள்வியே நிலவுகிறது. இதன்படி 4000 மெகாவோட் மின்சார கொள்ளவு உள்ள நிலையில் 2300 மெகாவோட் மின்சாரத்தை வழங்க முடியாதுள்ளது என கூற முடியாது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொள்ளவு இல்லை, அரசாங்கம் செலவு செய்யவில்லை எனவும் யாராலும் கூற இயலாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(அத தெரண)

LEAVE A REPLY