விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீருடைத் தொகுதி அறிமுகம்

0
121

(பி. முஹாஜிரீன்)

பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீருடைத் தொகுதி அன்பளிப்புச் செய்து அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (28) மாலை நடைபெற்றது.

பாலமுனை ‘அறீக்ஸ்’ நிறுவனத்தின் அணுசரனையில் பெற்றுக்கொள்ளப்பட்ட இச்சீருடைத் தொகுதி அறிமுக நிகழ்வு கழகத்தின் தலைவர் பி. முஹாஜிரீன் தலைமையில் பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘அறீக்ஸ்’ நிறுவனத்தின் முகாமையாளர் கே.ரி. தாஜூதீன் கலந்து கொண்டு சீருடைத் தொகுதியை அன்பளிப்புச் செய்தார். இந்நிகழ்வில் சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் பொறியியலாளர் எம்.எச். நௌஸாத், செயலாளர் எஸ்.ரீ. தஸ்தகீர், விளையாட்டுக் குழுத் தலைவர் எம்.எச். நிஸார்தீன் உட்பட நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இச்சீருடைத் தொகுதிக்கான நிதியினை ‘அறீக்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும் புரவலருமான ஏ.எம். முகம்மட் அலி அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

P1060545 P1060552

LEAVE A REPLY