(Poem) திருக்குர்ஆன்

0
56

தித்திதிடும் முத்துத் திருமறை
நித்தம் மனம் சுத்தம் தருமறை
குற்றம் அற பக்தியடைந்திட
இதை ஓது.

கொட்டும் சுவை முட்டும் மொழிநடை
சுட்டும் பொருள் தட்டும் சிந்தையை
எட்டும் புகழ் எட்டுத் திசையிலும்
இது மா மறையாம்

கற்றுத் தரு வற்றா அறிவிது
பெற்றுத் தரும் முற்றும் நல் வழி
குற்றம் குறை சற்றும் அற்றது
அறிவோம் நாம்

மக்கள் மன துக்கம் களை மறை
சிக்கல் பல போக்கும் பொது மறை
மிக்க நெறி திக்கும் பரப்பிடும்
இது மாமறையாம்.

பொங்கும் புகழ் தங்கப் பெருமறை
எங்கும் மிக சங்கை பெறும் மறை
மங்காப் புகழ் எங்கள் மறையினை
மதிப்போம் நாம்.
(நிஷவ்ஸ் )

LEAVE A REPLY