அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெருகிவரும் ஆதரவும், மக்கள் தலைவருக்கு கிடைக்கும் பாராட்டும் – ஒரு பார்வை

0
130

இந்த நாட்டு அரசியலில் அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகத்திற்கான புரட்சியொன்றினை ஏற்படுத்தும் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தடத்தை பதித்துவிட்டது என்பதை நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜீரணித்தே ஆக வேண்டும்.

கட்சிகள் என்பது மக்களுக்கு உதவி செய்யும், உரிமையினை வென்றெடுப்பதுடன், சலுகைககளையும் பெற்றுக் கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர, கட்சியின் பதவியே எமது இலக்கு என்ற சிந்தணை உருவெடுக்கின்ற பொழுது, அதனது பாதையும் திசைமாறியதாகவே இருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை அரசியலிலும், ஏனைய நகர்வுகளின் போதும் நாம் கண்கூடாக அறிந்து வைத்துள்ள உண்மையாகும்.

இந்த நிலையில் நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் விமேசானம், மற்றும் விடிவு என்பவை தொடர்பில் சதாவும் சிந்திக்க கூடிய மனத் துணிவை கொண்ட கட்சியாக இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாறியுள்ளது.

கட்சிகளுக்கு வயதை மட்டும் கூறிக் கொண்டு சமூகச் சிந்தணைகளின்றி செயற்படும் அரசியல் கட்சிகளையும், அதனது தலைமைகளையும் இன்று மக்கள் ஓதுக்கித்தள்ளும் ஒரு நிலையினை மறைமுகமாக காணமுடிகின்றது.

இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கின் பிரதான இரண்டாவது தளமான திருகோணமலையில் தமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளமை
கட்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.

திருகோணமலை மாவட்டத்தினை பொருத்த வரையில் மூதூர் தொடக்கம் புல்மோட்டை வரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு அதிகரித்து வரும் ஆதரவை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளும்,இடம் பெற்ற பொதுக் கூட்டமும் சான்றாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீனின் தூர சிந்தணையின் வெளிப்பாடான இந்த கட்சி,சமூகத்தின் நலன் சார் விடயங்களை முன்னெடுத்து செல்வதை மக்கள் அங்கீகரித்துள்ளதை தொடர்ந்து கட்சிக்கு கிடைத்துவரும் வரவேற்பு பரைசாற்றி நிற்கின்றது.

இதற்கு அப்பால் மாற்றுக்கட்சிகளை நம்பி மக்களது வாக்குகளை பெற்றுக் கொடுத்து அந்த கட்சியினால் மக்களுக்கு எதையும் செய்து கொடுக்க முடியாத நிலையினை கண்டு,மாற்று வழிகளை தேடும் நியாயமான பிரதேச அரசியல் தலைமைகளின் அடைவுகளும் இடம் பெறுகின்றதை நாம் அவதானிக்காமல் இல்லை.

இந்த அடைவு மட்டத்தை கண்ணால் கண்டும் அதனை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சுய நினைவற்றவர்களின் வீண் விமர்சனங்களுக்கு மத்தியில் சவால்களை சந்தித்து தனது கொள்கையில் உறுதி கொண்டு மக்களுக்காக தியாகத்துடன் செயற்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதீத வளர்ச்சிக்கு திருகோணமலை கட்சிப் போராளிகள் பெறும் பலமென்பதை எல்லோரும் உணர ஆரம்பித்துள்ளார்கள்.

இவ்வாறதொரு நிலையில் இன்னும் பலமிழந்து போயுள்ள பழைமை கட்சிகளின் கீதங்களே எமது மூச்சு என்று பிதற்றித்திரியும் வங்குரோத்து சக்திகள் அதில் இருந்து விடுபட்டு தன்னால் முடியாது என்பதை ஏற்றுக்கொண்டு செயற்படுகின்ற தலைமைகளுக்கு பங்கம் செய்யாமல் இருப்பது தான் கடமையாகும்.

(அபூ அஸ்ஜத்)

LEAVE A REPLY