சுகாதார முறைப்படி மாடறுப்பு தொழுவத்தினை பராமரிக்க ஷிப்லி பாறுக் நடவடிக்கை

0
105

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட மாடறுப்பு தொழுவத்திற்கு 2016.03.29ஆந்திகதி இன்று அதிகாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அதனுடைய நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த சில நாட்களாக மாடறுப்பு தொழுவத்திலிருந்து துர்வாடை வீசுவதாக அப்பிரதேச மக்கள் தொலைபேசியினூடாக மாகாண சபை உறுப்பினருக்கு செய்த புகாரினையடுத்தே இன்று அதிகாலை தொழுவத்தினை நேரடியாக பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.

இதன்போது அங்கு பணிபுரியும் பொதுசுகாதார பரிசோதகர், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரிடமும் அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அங்கு ஏற்பட்டுள்ள துர்வாடை எழுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விளக்கி அதனை உடனடியாக தீர்ப்பதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.

அதனைத்தொடர்ந்து நன்பகல் 1.00 மணியளவில் சுகாதார வைத்திய அதிகாரி U.L. நசீர்தீன், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாடறுப்பு தொழுவத்திற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் றகுமத்துல்லா ஆகியோரை ஒண்றாக அழைத்து இது சம்பந்தமாகவும் பொதுவான சுகாதார பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் காத்தான்குடி நகர சபையுடன் இணைந்ததாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும் இது தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்றினை எதிர்வரும் வாரமளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் தலைமையில் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY