முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்துக்காக குரல் கொடுப்பதையிட்டு மகிழ்கிறேன்: ஞானசார தேரர்

0
218

முஸ்லிம் அர­சியல் தலைவர்கள் தமது சமூ­கத்­துக்­காக குரல் கொடுப்­ப­தையும், சேவை செய்­வ­தையும் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

ஆனால் எமது சிங்­கள அர­சியல் வாதிகள் சமூ­கத்­துக்­காக குரல் கொடுப்­ப­தில்லை. இதனால் எமது அர­சியல் வாதிகள் முஸ்லிம் தமிழ் அர­சியல் வாதி­க­ளி­ட­மி­ருந்து சமூக உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்­டு­மென வேண்­டுகோள் விடுக்­கின்றேன் என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது முஸ்லிம் அமைச்­சர்­களும் எம்.பிக்­களும் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைப் பாரா­ளு­மன்­றத்தில் பேசு­கின்­றார்கள்.

வாதி­டு­கி­றார்கள். ஆனால் எமது அமைச்­சர்­களும், எம்.பிக்­களும் மௌன­மாக இருக்­கி­றார்கள். இதனால் எமது சமூ­கத்­துக்­காக குரல் கொடுக்க ஒரு­வ­ரு­மில்லை. அத­னாலே நாம் பௌத்த குரு­மார்கள் சமூ­கத்­துக்­காக குரல் கொடுக்­கின்றோம்.

வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்­களே மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­கின்­றார்கள்.

ஆனால் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சிங்­கள மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வதில் கரி­சனை காட்­டப்­ப­ட­வில்லை. மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட சிங்­கள மக்­களும் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

கடந்த கால அர­சாங்­கத்தின் காலத்தில் மஹிந்­தவால் குடி­யேற்­றப்­பட்ட வவு­னியா போகஸ்­வெவ குடி­யேற்­றத்­தி­லுள்ள சிங்­கள மக்கள் அடிப்­படை வச­திகள் இன்றி, குடிப்­ப­தற்கு நீரின்றி புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கடந்­த­கால அரசு பிரி­வினை வாதத்­துக்கு கீழ்ப்­ப­டி­ய­வில்லை. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு கீழ்ப்­ப­டி­ய­வில்லை. வடக்­கி­லி­ருந்து அக­தி­க­ளாக்­கப்­பட்ட மக்­களை அச்­ச­மின்றி மீள்­கு­டி­யேற்­றி­யது. வடக்கில் 6 குடி­யேற்­றங்கள் நிறு­வப்­பட்­டன.

இவ்­வாறு குடி­யேற்­றப்­பட்ட மக்­க­ளுக்கு அரு­கி­லி­ருந்த இரா­ணுவ முகாம்கள் உத­வி­களைச் செய்து வந்­தன. குடி நீரையும் விநி­யோ­கித்­தது. உலர் உணவுப் பொருட்­களை வழங்கி வந்­தது. ஆனால் கடந்த ஜன­வரி 8ஆம் திக­திக்கு பின்பு ஆட்­சி­மா­றி­யதும் அவர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இதனால் வடக்­கி­லி­ருந்து 1700 சிங்­களக் கும்­பங்கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளன.

போகிஸ்­வெவ சிங்­களக் குடி­யேற்­றத்தின் 35 கிலோ மீற்றர் பாதை வாகனம் செல்­ல­மு­டி­யா­துள்­ளது. இன்னும் செப்­ப­னி­டப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒவ்­வொ­ரு­மா­தமும் வடக்­குக்கு விஜயம் செய்து அங்­குள்ள தமி­ழர்­களின் குறை­களை கேட்­ட­றி­கிறார்.

ஆனால் வவு­னி­யாவில் அல்­ல­லுறும் சிங்­கள குடி­யேற்­றங்­க­ளி­லுள்ள மக்­களைச் சென்­று­பார்ப்­ப­தில்லை. ஏன் அவர்­களை மஹிந்த ராஜபக் ஷ அங்கு குடி­யேற்­றினார் என்­ப­த­னாலா?

வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­ப­ட­வுள்­ளது. பிரி­வி­னை­வா­திகள் இதற்­காக இர­க­சிய பேச்­சு­வார்த்­தைகள் நடாத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். வடக்கு கிழக்­கையும் இணைத்து தமிழ், முஸ்­லிம்கள் ஆளு­வ­தற்­கான முன்­னேற்­பாடே போகஸ்­வெவ குடி­யேற்றம் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­மைக்குக் கார­ண­மாகும்.

கோகிலாய் கிரா­மத்தில் 220 சிங்­களக் குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன. அக்­கு­டும்­பங்­களை அங்­கி­ருந்தும் வெளி­யேற்­று­வ­தற்கு வட­மா­காண சபை உறுப்­பினர் ஒருவர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறார். கோகிலாய் கிரா­மத்தில் நில­அ­ளவை மேற்­கொள்ளச் சென்ற நில­அ­ள­வை­யா­ளர்கள் வட மாகா­ண­சபை தமிழ் உறுப்­பி­னரால் தமது பணி­யினைச் செய்ய முடி­யா­த­வாறு திருப்பி அனுப்­பப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

வடக்கில் சிங்­கள குடி­யேற்­றங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரும்­படி கோரி­யுள்ளோம்.

ஆனால் ஜனா­தி­பதி இது­வரை நேரம் ஒதுக்­கித்­த­ர­வில்லை. சிங்­கள குடி­யேற்­றங்­களை வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ண­ச­பைகள் நிர்­வா­கிக்க முடி­யாது விட்டால் நிர்­வா­கத்தை இராணுவ முகாமிடம் கையளிக்கும் படி வேண்டிக் கொள்கிறோம்.

இன்று வடக்கில் இராணுவத்தினரும் அமைதியாகவே இருக்கிறார்கள். தமது பதவியைப்பற்றியும், பதவி உயர்வு பற்றியுமே நினைக்கிறார்கள்.

எமது நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க 27 ஆயிரம் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள்.

இராணுவத் தளபதியிடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம் சிங்கள குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பு வழங்குங்கள் என்று, என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY