மட்டக்களப்பில் நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு

0
142

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் சடலத்தை மீட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த சடலயம் மட்டக்களப்பு பாரதிபுரம் பகுதியைச் சேரந்த 17 வயதான சிறுமியுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் சிறுவர்கள் விடுதியொன்றில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்து வந்த சிறுமியொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியலுள்ளவர்கள் இவரை காணாமல் தேடிய போதே சடலத்தை கண்டுள்ளனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(NF)

LEAVE A REPLY