ஷரியா சட்டத்தை அமல்படுத்தக் கோரி பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

0
261

ஷரியா சட்டத்தை பாகிஸ்தானில் அமல்படுத்தக்கோரி தலைநகர் இஸ்லாமாபாதில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

பஞ்சாபின் முன்னாள் ஆளுனரான சல்மான் தஸீரைக் கொலைசெய்த காவலர் ஒருவர் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டம் கடுமையானதாக இருப்பதாக விமர்சித்துவந்த தஸீர், அதற்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

மதநிந்தனைச் சட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவப் பெண்மணியான அஸியா பீவியை உடனடியாக தூக்கிலிட வேண்டுமென்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

(BBC)

LEAVE A REPLY