பாம்பு கடித்தவுடன் செய்யவேண்டிய முதலுதவிகள்

0
213

பாம்பு கடி – பற்றிய சில தகவல்கள் மற்றும் செய்யவேண்டிய முதலுதவிகளும்.

1 . கடித்த இடம் , மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா …. ?

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல …

2 . கடித்த இடம் , இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா …. ? கடித்த இடம் சற்று தடித்து ( வீங்கி )
காணப்படுகிறதா .. ? கடுமையான வலி இருக்கிறதா .. ?

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும் …

முதலுதவி : –
1 . இறுக்கி கட்டுப் போடவேண்டாம் . இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம் , சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும் . லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது .

2 . காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும் .

3. பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும் .

4 . பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது . ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும் . அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது.

4 . இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும் . எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ , அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம் .

5 . பாம்பு கொத்திய இடத்தை , இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும் . பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும் .

6 . பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள் . ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை ” அட்மிட் ” செய்வதில்லை . எனவே கால தாமதம் செய்யாமல் , உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும் .

7 . இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும் . சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம் . எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால் , பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம் . ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம் . கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை .
பாம்பு கடித்தால் .. கிட்னியையும் , கண்களையும் உடன் பாதிக்ககூடும் . உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.

LEAVE A REPLY