மஹிந்த குடும்பத்தவர்கள் வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதை நிரூபித்தால் கூட்டுஎதிர்கட்சி கலைக்கப்படும்

0
149

முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தவர்கள் வெளிநாடுகளில் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்திருப்பதை அரசாங்கம் நிருபித்தால் கூட்டு எதிர்கட்சி கலைக்கப்பட்டுவிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி சிறிசேன எடுக்கின்ற எந்த ஒழுக்காற்று நடவடிக்கையையும் நான் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வேன். மேலும் கூட்டு எதிர்கட்சியை சேர்ந்த பலர் அதிலிருந்து வெளியேறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு வெளிநாடுகளின் ஆதரவு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆகவே அவர்கள் அதனை கண்டுபிடிக்கட்டும் எனவும் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த 18 பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிருபிக்க அரசாங்கம் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எதிராக ஆளும் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்ற போதிலும் ஆதாரங்களுடன் அவை நிருபிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY