கெய்ல் சாதனையையும் முறியடித்த கோஹ்லி

0
167

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடி காட்டிய கோஹ்லி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று மொகாலியில்  ஆட்டத்தில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 160 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் இந்தியா தடுமாற்றத்துடன் துடுப்பெடுத்தாடிய நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி கடைசி நேரத்தில் அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

அவர் 51 பந்துகளில் 82 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய கோஹ்லி அதிவேகமாக 1500 ஓட்டங்களை கடந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையையும் முறியடித்தார்.

முன்னதாக கிறிஸ் கெய்ல் 39 இன்னிங்ஸ்களில் 1500 ஓட்டங்களை தொட்டு சாதனை படைத்திருந்தார். ஆனால் கோஹ்லி இதை 39 இன்னிங்ஸ்களில் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ஓட்டங்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

எதிர்வரும் 31ம் திகதி மும்பையில் நடைபெறும் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY