ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய இஸ்லாமியர் சில மணித்தியாலங்களில் குத்திக் கொலை

0
245

பிரிட்­டனில் தனது வாடிக்­கை­யா­ளர்­களுக்கு பேஸ்புக் மூலம் ஈஸ்டர் வாழ்த்து தெரி­வித்த இஸ்­லா­மியர் ஒருவர் சில மணித்­தி­யா­லங்­களில் கத்­தியால் குத்தி கொல்­லப்­பட்­டுள்ளார்.

டனில் குடி­யே­றிய அஷாத் ஷா, ஸ்கொட்­லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடை­யொன்றை நடத்தி வந்­தவர். கடந்த வியா­ழ­னன்று “எனது அன்­பிற்­கு­ரிய கிறிஸ்­தவ தேசத்­திற்கு மிக மகிழ்ச்­சி­யான ஈஸ்டர் வாழ்த்­துக்கள்” என பேஸ்புக் மூலம் தெரி­வித்­தி­ருந்தார்.

அன்று இரவு 9 மணி­ய­ளவில் அவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வீதி­யொன்றில் காணப்­பட்டார். உட­ன­டி­யாக அவர் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­போ­திலும் அங்கு அவர் உயி­ரி­ழந்தார்.

40 வய­தான அஷாத் ஷா அப்­ ப­குதியில் மிகப் பிர­ப­ல­மான ஒரு­வ­ராக விளங்­கினார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர் படு­கொலை செய்­யப்­பட்­டமை குறித்து பலரும் அதிர்ச்சி தெரி­வித்­துள்­ளனர்.

அஷாத் ஷாவின் மர­ணத்­துக்கு அஞ்­சலி செலுத்தும் நிகழ்­வொன்று அஷாத் ஷாவின் கடைக்கு முன்னால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு நடை­பெற்­றது. ஸ்கொட்­லாந்தின் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யானோர் இந் ­நி­கழ்வில் கலந்­து­கொண்­டனர்.

இச்­ சம்­பவம் தொடர்­பாக 32 வய­தான நபர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட நபரும் ஒரு முஸ்லிம் என ஸ்கொட்­லாந்து அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

அஷாத் ஷாவின் கொலை­யினால் மக்கள் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர் என ஸ்கொட்­லாந்து முஸ்லிம் பேர­வையின் பணிப்­பாளர் ஷா பெல்­டாகுய் தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை அனை­வரும் அமை­தி­யாக இருந்து, மனி­தா­பி­மா­னத்தை அங்­கீ­க­ரிப்­பதில் ஒன்­றி­ணைய வேண்டும்” எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, அஷாத் ஷாவின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக அவரின் அயலவர்கள் நிதி சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY