அல்ஜீரியா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 12 இராணுவ வீரர்கள் பலி

0
123

வடக்கு ஆப்பிரிக்காவின் உச்சியில் உள்ள அல்ஜீரியா நாட்டில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அல்ஜீரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. சகாரா என்ற பகுதியில் உளவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆத்ரார் மற்றும் ரெக்கன் என்ற இரு நகரங்களுக்கு இடையில் டாமன்ராஸ்செட் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்தது.

இருப்பினும், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அல்ஜீரியா விமானப் படைத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY