இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம்

0
582

உலக கிண்ண கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கியதும் அதிருப்தியில் வசைபாடிய இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் (42 ரன்), எல்லைக்கோட்டை கடந்ததும் ஹெல்மெட்டையும், பேட்டையும் கோபத்தில் தூக்கி எறிந்தார். இந்த ஒழுங்கீன செயலுக்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

இதே போல் இலங்கை வீரர் ஸ்ரீவர்த்தனாவின் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி அவரை நோக்கி ‘வெளியே போ’ என்பது போல் செய்கை காட்டி, திட்டினார். இதற்காக அவர் போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக இழக்கிறார்.

LEAVE A REPLY