சவுதியிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா நிறுத்த வேண்டும்

0
165

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் குடியரசுக் கட்சியில் முன்னணியில் உள்ள டோனல்ட் ட்ரம்ப், வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இதுவரையான அவரது மிகவும் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார்.

“அமெரிக்கா ஃபர்ஸ்ட்” என்ற அணுகுமுறையே தான் ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மற்ற நாடுகளின் விவகாரங்களில் அக்கறையின்றியிருப்பதன் மூலமே தங்கள் நாட்டின் நலன்களை பாதுகாக்கமுடியும் என்று நம்புகின்ற வெளியுறவுக் கொள்கையை தான் கொண்டிருக்கவில்லை என்றாலும், அமெரிக்கா அதன் பங்காளிகளாலும் கூட்டாளிகளாலும் திட்டமிட்ட வகையில் துண்டாடப்படுவதாக கவலையடைவதாக ட்ரம்ப், நியுயோர்க் டைம்ஸ்-க்கு கூறியுள்ளார்.

இஸ்லாமிய அரசு குழுவுடன் போராடுவதற்கு சவுதி அரேபியா படையினரை அனுப்பாவிட்டால், அந்நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்வது பற்றி அமெரிக்கா சிந்திக்க வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு கூடுதல் பணம் செலுத்தாவிட்டால், அந்நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அசர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY