பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பினர்

0
222

உலக கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர்-10 சுற்றுடன் மூட்டையை கட்டிய பாகிஸ்தான் வீரர்கள் நேற்று முன்தினம் இரவு தாயகம் திரும்பினர். அவர்கள் இரு பிரிவாக கராச்சி, லாகூர் விமான நிலையங்களை வந்தடைந்தனர். ஹபீஸ், உமர் அக்மல், வஹாப் ரியாஸ், அகமது ஷேசாத் உள்ளிட்டோர் வந்து இறங்கிய லாகூர் விமான நிலையத்தில் ரசிகர்கள், ‘அவமானம்…அவமானம்’ என்று கோஷமிட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். கேப்டன் அப்ரிடி மட்டும் துபாயில் தங்கி விட்டார். சில நாட்கள் கழித்து அவர் நாடு திரும்புவார் என்று தெரிகிறது.

LEAVE A REPLY