(Update) பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்; பலி எண்ணிக்கை 69ஆக உயர்வு!

0
146

160327163021_pakis_2791168gபாகிஸ்தானில், லாகூர் நகரில் பூங்கா ஒன்றில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சிறார்கள் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள்.

சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவிற்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தப் பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறார்கள், பெரியோர்கள் என பலர் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு Jamaat-ul-Ahrar என்ற அமைப்பும் உரிமை கோரியுள்ளது.

தாக்குதலை தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீசாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY