விராத் கொஹ்லியின் அபார ஆட்டம் இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்துச் சென்றது

0
163

உலக இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி 6 விக்கெட்களால் வென்றது.

மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரோன் பின்ச் 34 பந்துகளில் 43 ஓட்டங்களையும் கிளென் மெக்ஸ்வெல் 28 பந்துகளில் 31 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 16 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஹர்தீக் பாண்டியா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து நெருக்கடிக்குள்ளானது. 4 ஆவது விக்கெட்டுக்காக விராத் கோஹ்லியும் 45 ஓட்டங்களைப் பெற்றனர். யுவராஜ் சிங் ஓட்டங்களுடன் 21 ஆட்டமிந்தார்.

எனினும் விராத் கோஹ்லி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி பந்துகளில் 51 ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் தோனி 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றார். கடைசி ஓவரை எதிர்கொண்ட அவர் அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டறி அடித்து போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

LEAVE A REPLY