(Video) பாகிஸ்தானின் லாகூர் நகரில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி: 200 பேர் காயம்

0
75

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லாகூகர் நகரின் சிறுவர் பூங்காவொன்றில் இன்று மாலை சிறார்கள், பெண்கள் உட்பட பலர் நிறைந்திருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY