அமேரிக்காவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகம்: ஓபாமா

0
84

அமெரிக்க அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் முன்வைத்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து தனது வாராந்திர வானொலி உரையில் பேசியதாவது:-

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறவர்கள் அமெரிக்க முஸ்லிம்கள்தான்.

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அதிகளவில் பங்காற்றியிருக்கிறார்கள்.

முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். இது அமெரிக்காவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுக்கு எதிரானதாகவும், அமெரிக்காவில் மதசுதந்திரம் உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் பேச்சாகவும் உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க இராணுவத்தின் முதல்பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது.

இவ்வாறு ஒபாமா பேசினார்.

LEAVE A REPLY