இந்தியா அரையிறுதிக்கு முன்னேற 161 ரன்கள் வெற்றி இலக்கு

0
35

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி வாய்ப்புக்காக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகின்றன.

முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆரோன் பின்சும், கவாஜாவும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள்.

கவாஜா அதிரடியாக ஆடி பும்ரா வீசிய 2-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் பின்ச் 2 சிக்ஸ் அடிக்க ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணி 4 ஓவரில் 50 ரன்களை தொட்டது.

5-வது ஓவரில் நெஹ்ரா கவாஜாவை 26 ரன்னில் வீழ்த்தினார். அதன் பிறகு இந்திய பவுலர்கள் சிறப்பாக வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். வார்னரை 6 ரன்னில் அஸ்வின் விழ்த்தினார். கேப்டன் சுமித்தை 2 ரன்னில் யுவராஜ் வீழ்த்த ஆஸ்திரேலியா தடுமாற ஆரம்பித்தது.

பின்ச் மற்றும் மேக்ஸ்வெல் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்கள். ஆனால் பின்ச் 43 ரன்னில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியாவிற்கு ஆபத்தாக திகழ்ந்த மேக்ஸ்வெல் 31 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அற்புதமாக பந்து வீசிய நெஹ்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பாண்டிய இரண்டு விக்கெட்டும், யுவராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

161 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களமிறங்கயுள்ளது இந்தியா.

LEAVE A REPLY