சிறு வயதுதொட்டு மார்க்கக்ல்வியினை போதிப்பதன் மூலமே எம்பிள்ளைகளை ஒழுக்கசீலர்களாக வளத்தெடுக்கலாம்: ஷிப்லி பாறுக்

0
270

புதிய காத்தான்குடி அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் மக்தப் பிரிவிற்கான போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு 2016.03.26ஆந்திகதி (சனிக்கிழமை) பதுரியா பள்ளிவாயலில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்கள் கலந்துகொண்டு கொண்டார்.

புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் வீ.டீ. ஹனிபா (அதிபர்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பதுரியா மக்தப் பிரிவின் அதிபர் அஷ்ஷெய்ஹ் எம். ஹிஸ்புல்லா (றஸாதி), அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ. இன்னாமுல் ஹசன் (முப்தி, றஸாதி) உட்பட பல உலமாக்கள், முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, அல்ஹாஜ். எம். காதர், அல்ஹாஜ். அபுல் காசிம், எம். முகம்மட் ஹான் (அதிபர்) மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் கீழியங்கும் மக்தப் பிரிவிற்கு சுமார் 120000.00 ரூபா பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரத்தினைக் கையளித்து உரையாற்றிய கிழக்கு மகாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,

பதுரியா மக்தப்பிரிவின் வளர்ச்சியைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மக்தப் பிரிவு இந்த பதுரியா மக்தப்பிரிவு தான். சுமார் 300 மாணவர்களைக் கொண்டியங்கும் பதுரியா மக்தப்பிரிவில் 5 மௌலவிமார்கள், 4 மௌலவியாக்கள் உஸ்தாதுகளாக இருந்து செயற்படுவதன் மூலமாகத்தான் இந்த மக்தப் பிரிவு பாரிய வளர்ச்சியினையடைந்துள்ளது. இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இஸ்லாமிய நடைமுறை குடும்பங்களில் ஆரம்பத்திலிருந்து வருகின்ற போது, பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. குடும்பப் பெண்களில் 100 பேரை எடுத்துக் கொண்டால், அவர்களில் 25 வீதமானவர்கள் தங்கள் கணவனை விட்டு பிரிந்து, வாழ்ந்து வருவதினை அவதானிக்க முடிகின்றது. இது ஒரு பாரிய சமூக பிரச்சினையாகவுள்ளது இதற்கு அடிப்படைக்காரணம் மார்க்க விடயங்களைக் கடைப்பிடிப்பதிலுள்ள குறைபாடு தான் காரணம் என்றார். ஒரு மனிதனுடை நடை, உடை, பாவனை அத்தனையும் தெளவா தான். எனவே, தான் நல்ல குழந்தைகளை நாம் ஆரம்பத்திலிருந்தே உருவாக்க வேண்டும். அதற்கு இவ்வாறான மக்தப் வகுப்புக்கள் வழிவகுக்குமெனவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் வெளிவந்த பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் அதிகூடிய சித்தியான 3A னை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை ஓர் ஹாபிழ் பெற்றுக்கொண்டார் என்பதனை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இப்படியானவர்கள் மார்க்கக்கல்வியுடன் உலகக்கல்வியினையும் கற்கும்போது அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் எமது மார்க்கக்கல்வியுடன் ஒத்ததாகவும் அல்லாஹ்வுக்கு இறைபணிந்து சேவையாற்றக்கூடியவர்களாகவும் எதிர்காலத்தில் திகழ்வார்கள்.

மேலும் காத்தான்குடி பதுரிய்யா ஜூம்ஆ பள்ளியவாசலானது காத்தான்குடி பிரதேசதத்தில் குறைந்த வறுமைானத்தினை பெற்றுக்கொள்ளும் ஓர் ஜூம்ஆ பள்ளிவாசலாக இருந்தபோதும் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை இப்பள்ளிவாசலை பரிபாலனம் செய்துவரும் நிருவாக சபை இப்படியானதொரு மக்தப் பிரிவினை திறம்பட ஆரம்பித்து 5 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கூட இம்மார்க்கக்கல்வியினை கற்று மற்றவர்களுக்கும் போதிக்கக்கூடியவர்களாக இக்கல்லூரி செயற்படுவதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோகமாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.

அத்தோடு, மக்தப்பிரிவு ஒன்றிக்கான பிரிதொரு கட்டடமைக்க இருப்பதாக இங்கு என்னிடம் தெரிவித்தனர். அதற்கு சுமார் ஆறு இலட்சமளவில் தேவைப்படுவதாகக் கூறினர். அதற்கான வேலைகள் ஆரம்பித்தவுடன், இன்ஷா அல்லாஹ் எனது சொந்த நிதியிலிருந்து 50000.00 ரூபாயினைத் தருவதாகவும் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

-M.T. ஹைதர் அலி

LEAVE A REPLY