காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு (anesteesiya machine) மயக்க மருந்தேற்றும் இயந்திரம் வழங்கிவைப்பு

0
240

எம்.எச்.எம்.அன்வர்-

அஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு anesteesiya machine மயக்க மருந்தேற்றும் இயந்திரம் வைத்திய அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜாபிர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுக்கு புணர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகவும், அஷ்ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி தாசிம் அவர்களும் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.

சுமார் 3.5 மில்லியன் பெறுமதியான இவ்வியந்திரம் சத்திர சிகிச்சை செய்வதற்காக மயக்கமடையச்செய்யும் கருவி என்பதுடன், காத்தான்குடி வைத்தியசாலைக்கு கிடைத்தமையிட்டு பெரிதும் பயன்படவுள்ளதாகவும் மேற்படி கருவியை வழங்க இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வைத்தியசாலை அபிவிருத்திக்குழு மற்றும் காத்தான்குடி மீடியா போரம் போன்றவற்றிற்கு நன்றி தெரிவிப்பதாக வைத்திய அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜாபிர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு அதிதியாக கலந்துகொண்ட அஷ்ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.தாசிம் கருத்து தெரிவிக்கையில்,

எமது நிறுவனம் அனைத்து இன மக்களுக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கிலேயே செயற்படுவதாகவும் இந்த வகையில் காத்தான்குடி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வியந்திரம் அனைத்து இன மக்களுக்கும் பயன்பட வேண்டும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

10bae1fb-e604-4fe1-9b0c-cd206391395a 5696a090-44a1-4a9f-8f42-6e71cdc12054 c63c1965-c3a4-492f-91d4-d6a3b30e597a c72a4b92-17de-408e-ac44-fafef566d660 e3cf5bc3-eda8-468d-a0c9-5b2e0f75a790 fc823982-3c90-4220-bdc2-3190a066b4df

LEAVE A REPLY