நாய் குறுக்கே பாய்ந்ததில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: கைக்குழந்தையின் தாய்க்கு கால் முறிவு

0
68

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் -தும்பங்கேணி பிரதான வீதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 4 மாத கைக் குழந்தையின் தாய் கால் முறிந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பழுகாமத்தைச் சேர்ந்த நந்தினி தேவராஜன் (வயது 26) என்பவரே கால் முறிந்த நிலையில் படுகாயமடைந்தவராகும்.

மேற்படி தாய் தனது கைக்குழந்தையுடன் பழுகாமத்திலிருந்து திக்கோடை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தும்பங்கேணி எனுமிடத்தில் வீதிக்குக் குறுக்கே பெரிய நாயொன்று திடீரெனப் பாய்ந்ததால் முச்சக்கர வண்டி குடை சாய்ந்தது.

அப்போது கைக்குழந்தையின் தாயின் கால் முறிந்தது. உடனடியாக களுவாஞ:சிக்குடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY