(Poem) கிரிக்கட் வெப்பம்

0
109

கெய்லாகக் கொளுத்துகிறது
வெயில்

தங்க நிழலில்லா
பணியாளர்
சங்கா இல்லா
அணியாக
சங்கடப் படுகின்றனர்.

‘பச்சை’
பரிதாபமாய்க் காய
‘உச்சி’ ஓய்வு பெற
இன்னுமொரு
இனிங்க்சிக்காய்
ஏங்கி நிற்கின்றன
இலையில்லா மரங்கள்.

எத்தனை
‘விசிறிகள்’
சுற்றினாலும்
கத்தினாலும்
வெப்ப விக்கட்டை
வீழ்த்த முடியவில்லை.

நியூசிலாந்து அணியின்
நிறமாக மாறாதோ
வானத்தைப் பார்த்து
வாடுகின்றன மனங்கள்

சவ்த் ஆபிரிக்காவாய்
சவுண்ட் கொடுக்கும் வானம்
உரிய நேரத்தில்
ஒன்றும் பெய்யாமல்
மற்ற நேரத்தில்
மழையாய்க் கொட்டும்.

எத்தனை கைகள்
ஏந்தி நின்றாலும்
அத்தனையும் தாண்டி
ஆறு அடிக்கும் அப்ரிடியாய்
பிரார்த்தனைகளைத் தாண்டி
பின்னி எடுக்கிறது வெயில்.

ஆண்டவனே
அகோர வெயிலை
அவுட் ஆக்கு.
எங்கள் மீது
இரக்கங் காட்டு.

Mohamed Nizous

LEAVE A REPLY