சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

0
194

சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதைப் பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள். அது மட்டு மல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலி னின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா? என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்து கொள்ளலாம். தாகம் எடுத் தால் தண்ணீர் அருந்திக் கொள்ள லாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாய மில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது, நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி, பெற்றுக் கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி, அளவுக்கு அதிக மாக தண்ணீரை அருந்த தேவை யில்லை. அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில், நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கி விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண் ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை பாதித்து விடும்.

நம்மில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவ தாகவே இருக்கிறது.

இது எவ்வளவு தவறானது ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக் கிறது என்பதை மக்கள் அறியா மலேயே இருக்கின்றனர்.

உணவு செரிக்காமல் வயிற்று வலி என்று மருத்துவர்களிடம் செல் வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்துபவர்கள்தான்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ் வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு பின்னர் இரண்டு மணி நேரம் வேண்டிய மட்டும் தாராளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச் சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே, சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்கள். இதோ! நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாமல் அதிக உப்புள்ள உணவை உண்ணும் போது அது தாகத்தை தூண்டி தண்ணீரை அருந்தச் செய்து விடும். அதே போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடா தீர்கள் அவ்வாறு வேகமாக சாப்பிடும் போது, உணவுக் குழாயில் உணவு இறங்காமல் விக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைப் போக்க தண்ணீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி கொண்ட உமிழ் நீருடன் சேர்த்து விழுங் கினால் அது உணவை வயிற்றில் சுரக் கும் திரவத் துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்து விடும்.

LEAVE A REPLY