அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு

0
187

(ஏ.எல்டீன்பைரூஸ்)
புதிய காத்தான்குடி அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் மக்தப் பிரிவிற்கான போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு 26.03.2016 சனிக்கிழமை பதுரியா பள்ளிவாயலில் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கலந்து கொண்டார்.

புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் வீ.டீ.கனிபா(அதிபர்) தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் பதுரியா மக்தப் பிரிவின் அதிபர் அஷ்ஷெய்ஹ் எம்.ஹிஸ்புல்லா(றஸாதி) அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.இன்னாமுல்ஹசன்(முப்தி,றஸாதி)உட்பட பல உலமாக்கள், முன்னால் நகர முதல்வர் மர்சூக் அஹமட்லெப்பை,அல்ஹாஜ் எம்.காதர் ஹாஜி,அபுல் காசிம்ஹாஜி,எம்.முகம்மட்ஹான்(அதிபர்)மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அல் பத்ர் இஸ்லாமிய நிறுவனத்தின் கீழ் இயங்கும் மக்தப் பிரிவிற்கு சுமார் 120000.00 பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரத்தினை கையளித்து உரையாற்றிய கிழக்கு மகாகான சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,

பதுரியா மக்தப்பிரிவின் வளர்ச்சியை பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். காத்தான்குடியில்ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மக்தப் பிரிவு இந்த பதுரியா மக்தப்பிரிவுதான்.

சுமார் 300 மாணவர்களை கொண்டு இயங்கும் பதுரியா மக்தப்பிரிவில் 5 மௌலவிமார்கள் 4 மௌலவியாக்கள் உஸ்தாதுகளாக இருந்து செயல்படுவதன் மூலமாக தான் இந்த மக்தப் பிரிவு பாரிய வளர்ச்சியினை அடைந்துள்ளது. இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும்.

இஸ்லாமிய நடைமுறை குடும்பங்களில் ஆரம்பத்திலிருந்து வருகின்ற போது பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

குடும்ப பெண்களில் 100 பேரை எடுத்துக் கொண்டால் அவர்களில் 25 வீதமானவர்கள் தங்கள் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதினை அவதானிக்க முடிகின்றது.

இது ஒரு பாரிய சமூக பிரச்சினையாக உள்ளது இதற்கு அடிப்படை காரணம் மார்க்க விடயங்களை கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுதான் காரணம் என்றார். ஒரு மனிதனுடை நடை,உடை, பாவனை அத்தனையும் தவ்வத்தான்.

எனவே தான் நல்ல குழந்தைகளை நாம் ஆரம்பத்திலிருந்தே உருவாக்க வேண்டும் அதற்கு இவ்வாறான மக்தப் வகுப்புகள் வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

மக்தப்பிரிவு ஒன்றிக்கான பிரிதொரு கட்டிடம் அமைக்க இருப்பதாக இங்கு என்னிடம் தெரிவித்தனர் அதற்கு சுமார் ஆறு லட்சம் அளவில் தேவைப்படுவதாக கூறினர்.

அதற்கான வேளைகள் ஆரம்பித்தவுடன் இன்ஷா அல்லாஹ் எனது சொந்த நிதியிலிருந்து 50000.00 ரூபாயினை தருவதாகவும் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

LEAVE A REPLY